Tuesday, January 13, 2009

அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்




புதுப்பிக்கும் நாள்
-
நகரத்து பொங்கலில் நாட்டமில்லை.

தகரத்தில் பெய்த மழை போல்தடதடவென முடிகிறது.

அனைவரும் வருகிறார் அனுமதி விடுப்பில்.

பரபரவென்றே பார்க்கிறார் வேலைகள்.

சோப்புநீர் போட்டு கழுவிய தரைகள்.

விம் பவுடர் தொட்டு விளக்கிய கேஸ் ஸ்டவ்இரண்டு கரும்புகள், இஞ்சி மஞ்சள்மருந்துபோல் வாங்கிய வாழைச் சீப்பு.

அரைக்கிலோ அரிசி வாசனைப் பொருட்கள்வைத்துத்திரும்பிய சில நொடிக்குள்ளேயேவிசிலடித்து அழைக்கும் குக்கர் பொங்கல்கிண்ணமும் ஸ்பூனும் கைகளில் ஏந்திஎண்ணம் முழுதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்எல்லோர் செல்லிலும் எஸ்எம்எஸ் வாழ்த்துக்கள்வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல்எல்லாம் நடக்குது அவசர கதியில்.எந்திர வாழ்க்கையின் கொடைகள் விழாக்கள்.

துருப்பிடித்த நாளை துலக்கும் பொடிகள்.

கிராமத்து பொங்கலில்தான் கிறுகிறுப்பதிகம்மராமத்து பார்த்த மண்வீடுகள் கூடமணப்பெண் போலவே கவர்ச்சியாய் தெரியும்.கரும்புக் கட்டுகள், கலர்ப்பொடி கோலங்கள்.

வரிசை தட்டுகள்,வாழைத்தார்கள்.

எமனின் வயிற்றை எடுத்துவந்தது போல்எல்லோர் வீட்டிலும் பரங்கிக்காய்கள்.

மஞ்சள் கொத்துக்கள் மகிழ்ச்சிப் பாடல்கள்வஞ்சகமில்லா வாழ்த்துக் குரல்கள்.

பரணில் கிடந்த பானையை இறக்கிபளபளவென்றே புளியால் துலக்கிஅரிசி, வெல்லம், ஏலம், முந்திரிஅதன்மேல் நெய்மழை திராட்சைத் தூவல்.

பொங்கி வருகையில் குலவை சத்தம்அம்மா வைத்த சர்க்கரை பொங்கல்அடிநாக்கு வரையிலும் ஒட்டிக் கிடக்கும்.

மாட்டுப் பொங்கல், மஞ்சு விரட்டுமைதானத்தில் ஊர்மக்கள் கூடிபேதமறந்த ஆட்டம் பாட்டம்.

கூட்டுப் புழுவாய் தவிக்கும் மனிதர்கள்!பட்டாம் பூச்சியாய் பரிணாமம் பெறுங்கள்.விழா நாள் என்பது வெறும் நாள் அல்ல.

அலுத்துச் சலிக்கும் அழுக்கான வாழ்வைபுதுப்பிக்கும் நாளென புரிந்து கொள்ளுங்கள்.


- நன்றி தீக்கதிர்