Wednesday, April 29, 2009

ஆம் நாங்கள் தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரனாப் முகர்ஜி





கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான a.k அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.

இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

Tuesday, January 13, 2009

அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்




புதுப்பிக்கும் நாள்
-
நகரத்து பொங்கலில் நாட்டமில்லை.

தகரத்தில் பெய்த மழை போல்தடதடவென முடிகிறது.

அனைவரும் வருகிறார் அனுமதி விடுப்பில்.

பரபரவென்றே பார்க்கிறார் வேலைகள்.

சோப்புநீர் போட்டு கழுவிய தரைகள்.

விம் பவுடர் தொட்டு விளக்கிய கேஸ் ஸ்டவ்இரண்டு கரும்புகள், இஞ்சி மஞ்சள்மருந்துபோல் வாங்கிய வாழைச் சீப்பு.

அரைக்கிலோ அரிசி வாசனைப் பொருட்கள்வைத்துத்திரும்பிய சில நொடிக்குள்ளேயேவிசிலடித்து அழைக்கும் குக்கர் பொங்கல்கிண்ணமும் ஸ்பூனும் கைகளில் ஏந்திஎண்ணம் முழுதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்எல்லோர் செல்லிலும் எஸ்எம்எஸ் வாழ்த்துக்கள்வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல்எல்லாம் நடக்குது அவசர கதியில்.எந்திர வாழ்க்கையின் கொடைகள் விழாக்கள்.

துருப்பிடித்த நாளை துலக்கும் பொடிகள்.

கிராமத்து பொங்கலில்தான் கிறுகிறுப்பதிகம்மராமத்து பார்த்த மண்வீடுகள் கூடமணப்பெண் போலவே கவர்ச்சியாய் தெரியும்.கரும்புக் கட்டுகள், கலர்ப்பொடி கோலங்கள்.

வரிசை தட்டுகள்,வாழைத்தார்கள்.

எமனின் வயிற்றை எடுத்துவந்தது போல்எல்லோர் வீட்டிலும் பரங்கிக்காய்கள்.

மஞ்சள் கொத்துக்கள் மகிழ்ச்சிப் பாடல்கள்வஞ்சகமில்லா வாழ்த்துக் குரல்கள்.

பரணில் கிடந்த பானையை இறக்கிபளபளவென்றே புளியால் துலக்கிஅரிசி, வெல்லம், ஏலம், முந்திரிஅதன்மேல் நெய்மழை திராட்சைத் தூவல்.

பொங்கி வருகையில் குலவை சத்தம்அம்மா வைத்த சர்க்கரை பொங்கல்அடிநாக்கு வரையிலும் ஒட்டிக் கிடக்கும்.

மாட்டுப் பொங்கல், மஞ்சு விரட்டுமைதானத்தில் ஊர்மக்கள் கூடிபேதமறந்த ஆட்டம் பாட்டம்.

கூட்டுப் புழுவாய் தவிக்கும் மனிதர்கள்!பட்டாம் பூச்சியாய் பரிணாமம் பெறுங்கள்.விழா நாள் என்பது வெறும் நாள் அல்ல.

அலுத்துச் சலிக்கும் அழுக்கான வாழ்வைபுதுப்பிக்கும் நாளென புரிந்து கொள்ளுங்கள்.


- நன்றி தீக்கதிர்

Tuesday, December 23, 2008

இன்று தந்தை பெரியார் நினைவு நாள்


பெரியார் மேடையில் பேசிய சில துளி...

நான் யார்?
எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்ப-மாகும்; குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்-பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்-களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்-படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் - நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்-பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளி-யேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது - அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்-தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்ட-வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.
(கான்பூரில் 29, 30, 31.12.1944இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)

நான் எப்படி?
நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவை-களால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடிய-வைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.
(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

சொல்வது கட்டளையா?
நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
(விடுதலை, கட்டுரை 8.10.1951)

என் துணிவு
நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடு-கின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்-கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்பு-க்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)

நான் ஒரு தொண்டன்
நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டி-லேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டு-கோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனே யொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.
(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)

Wednesday, November 26, 2008

மாவீரர் நாள் 2008

“ மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை;
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள் ”
- தேசியத் தலைவர்.



எங்கிருந்தாலும் சிறகுகள் விரிப்போம் !
எல்லைகள் தாண்டி அங்குதான் பறப்போம் !
கல்லறை வீரரை நெஞ்சினில் நினைப்போம்!!
விளக்கேற்றும் இந்நாளில் உணர்வோடு கலப்போம்!!
















Friday, October 17, 2008

தமிழீழ மக்களைப் படுகோலை செய்யும் இந்திய-இலங்கை அரசுகளைக் கண்டித்து....

தமிழீழ மக்களைப் படுகோலை செய்யும் இந்திய-இலங்கை அரசுகளைக் கண்டித்து ஈரோட்டில்
“கருப்புக்கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்”

































Wednesday, August 27, 2008

ஆளுமை என்னும் முகமூடி

ஆளுமை என்றால் என்ன?
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லாகட்டும் Personality என்ற ஆங்கிலச் சொல்லாகட்டும் இரண்டிலுமே ‘ஆள்’ - ‘person’ என்ற சொல் அடங்கி இருக்கிறது. ‘persona’ என்ற சொல்லு-க்கு முகமூடி என்று பொருள். கிரேக்க நாடகங்களில் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற முகமூடியை அணிந்து நடிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நாம் எந்த முகமூடியை அணிந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பதுதான் ஆளுமை என்பது.
ஆளுமை வளர்ச்சி:
ஒரு மனிதனின் ஆளுமை அவன் வாழும் சூழ்நிலைக் கூறுகளாலும் மரபு வழி காரணிகளாலும் நிலைப்படுத்தப்படுகிறது. அதாவது அவனது குடும்பம், தொழில், செய்யும் இடம், படிக்கும் அல்லது படித்த பள்ளியின் சூழ்நிலை, சமுதாயம், மற்றும் கலாச்சாரம் முதலியவை ஆளுமை வளர்வதற்கு பெரிதும் காரணமாக இருக்கின்றன.இந்த இந்த ஆளுமைத்தன்மைகள் மரபு வழியாக வருகிறது; இந்த இந்த ஆளுமைத்-தன்மைகள் சூழ்நிலைக் காரணமாக வருகிறது என்று அறுதியிட்டுக் கூற முடிவதில்லை.வளரும் நிலையில் அல்லது வளர்ந்துவிட்ட நிலையில் பொதுவாகச் சமுதாயம் எதிர்-பார்க்கும் அல்லது மிக விரும்பும் தனி மனித நடத்தைகளில் சிலவற்றை பார்ப்போம்.
ஒழுக்கம்:
ஓழுக்கம் என்பது ஏதோ அசாத்தியமான செயல்களைச் செய்வதல்ல. சாதாரண செயல்களையே சிறப்பான முறையில் செய்வது, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் என்ன பயன்? அது நம் உள்ளுணர்வுகளை ஒழுங்குபடுத்து-வதோடு திடீரென வரும் இன்னல்களை சமாளிக்கும் உறுதியைக் கொடுக்கும். ஒரு செயலைக் கடைசிவரை முயன்று செய்து முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும். துன்பம் நம்மை அலைக்கழிக்க முடியாது.
ஒரு குறிக்கோளைத் தொடங்கும் முன், நன்கு முன் தயாரிப்பு செய்து கொள்வதும், இடை நிறுத்தம் செய்யாமல் இலக்கை அடைவதும், ஒழுக்க நடத்தையுள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகிறது.ஒவ்வொரு வெற்றி முகமூடி அணிந்துள்ள-வரின் பின்னாலும் ஒழுக்கம் நிச்சயம் முக்கிய இடத்திலிருக்கும்.
உரையாடல் திறன்:
அடிக்கடி சந்திக்கின்ற நண்பர்களாக இருந்தாலும் எப்போதேனும் சந்திக்கின்ற நபராக இருந்தாலும் உற்சாகமான உரை-யாடலைத் தான் ஒவ்வொரு தனி மனிதனும் விரும்புகிறான். ஆனால் நடப்பது என்ன? பலபேர் எப்போது சந்தித்தாலும் தன்னுடைய குறைகளையும் கஷ்டங்களையுமே பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது அடுத்தவன் பணமும் வசதியும் உள்ளவனாக இருக்கிறான் என்பதைப் பற்றி புழுங்கிக் கொண்டிருப்-பார்கள். எதிரில் உள்ளவர் உற்சாகமான மனநிலையில் இருந்தாலும் சற்று நேரத்தில் அவர் சேர்ந்துபோய் எதையோ பறிகொடுத்த-வர் போலாகிவிடுவார்.
எப்படி இருக்கிறீர்கள்?ஏதோ இருக்கிறேன்வியாபாம் எப்படி நடக்கிறது?ஏதோ போய்க்கிட்டிருக்குஏன் வருமானம் சரியில்லையா?ஹூம் அவனவன் நாலஞ்சு வீடு, கார் கடை கண்ணி என்றிருக்கிறான். நாம...இந்த ரீதியில் ஒரு மணி நேரம் என்ன - ஒரு நாளெல்லாம் கூட பேசுபவர்கள் இருக்-கிறார்கள்.தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி நகைச்சுவை ததும்ப தன்னம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவரை தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொள்ளலாம்.
அக்பர், பீர்பாலை நோக்கி எரிச்சலுடன் கேட்டார். ஆரம்பத்தில் அறிவாளியாகத்தானே இருந்தீர் கள்; வரவர முட்டாளாகி விட்டீர்களே! ஏன்?அதற்கு பீர்பால், எல்லாம் உங்களுடன் பழகியதால் தான் என்றாராம் அமைதியாக.ஒருவர் கேட்டார்.உங்கள் அலுவலகத்தில் மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்?பாதி பேர்தான் என்றார் அலுவலக மேலாளர்.
தன்னை உணர்தல்:
நம்முடைய நோக்கம் அடைய விரும்பும் இலக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் முன்பு நம்மைப் பற்றிய மதிப்பீடு முக்கியம். நம்முடைய கல்வி, செல்வநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலக்கை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்று கணிக்க வேண்டும்.எழுத்தாளராக விரும்பும் ஒருவர் முதலில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை எழுதிப் பழக வேண்டும். பிறகு மாதம் ஒரு கட்டுரை என்று முயற்சி செய்யலாம். பின்னர்தான் புதினம் எழுத முயற்சிக்க வேண்டும்.
ஒரு வியாபாரம் அல்லது தொழில் செய்ய முற்படும் போதுகூட அனுபவம் முதலீடு வியாபார வாய்ப்பு ஆகியவற்றை மிகக் கவனத்துடன் புரிந்து செயல்பட வேண்டும். மலைகளை பெயர்க்கும் நம்பிக்கை என்று ஒன்று இருக்குமானால் அது சுய சக்தியில் கொள்ளும் நம்பிக்கைதான் - மாரி எப்னர் - எஷன்பாக. கடுகளவு முயற்சியைச் செய்துவிட்டு மலையளவு சாதனை நிகழ்த்திவிட முடியாது.
நல்ல விஷயங்களை அடைய அதிர்ஷ்டம் வேண்டும் அதெல்லாம் நமக்கு இல்லை என்று தாழ்வு மனப்பான்மையில் வாழ்பவர் பலர். நாம் மற்றவர்களுக்கு ஈடானவர்களல்ல நம்மால் எதையும் சாதிக்க முடியாது, பலமற்ற நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்னும் சிந்தனைகளால் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் குறைந்து செயல்திறன் குன்றிவிடும். என்ன நடந்தாலும் சரி; வெற்றி பெறுவேன் என்னும் மனப்பான்மை உள்ளவர்-களாலேயே உயர்ந்த சமூகம் உருவாகிறது.
தன்னம்பிக்கை என்பது சுயநலமுமல்ல; அகங்காரமுமல்ல, அது பேரறிவு. கற்றல் எனும் கலை: கற்றுக் கொள்வது என்பது சிறந்த அனுபவம். சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்பவர்கள் அறிவாளிகள். பிறருடைய அனுபவங்களைக் கொண்டு கற்றுக் கொள்பவர்கள் பேரறிவாளர்கள். அறிவைத் தேடுவது என்பதோடு நில்லாமல் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சியே ஒருவனை முழுமைப்-படுத்துகிறது.
ஒரு விஷயத்ப் பற்றி நமக்குத் தெரியுமா? அல்லது முழுமையாகத் தெரியுமா? என்று கேட்டுப் பார்ப்போம். தெரியும் என்று சொன்னால் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பொருள். தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்வது மேலும் கற்றுக் கொள்ளவே என்று அணுக வேண்டும்.நம்முடைய தேவை, ஆர்வம் தாண்டி உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஏற்கனவே நமக்குள் பதிவு செய்யப்-பட்டிருக்கிற விஷயங்களை தவறு என்று உணர்ந்து அதை அழித்துவிடுவதும் கற்றல்-தான். எனக்குத் தெரியாது என்று நினைப்பதற்கு மாறாக இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளத் தயாராக மனதை மாற்றி பார்வையை விரிவுபடுத்தினால் வாழ்க்கைப் பயணம் சுகமாகும்.
கவலைகளை வெல்லும் கலை:
கவலை என்றநோயை நீக்கும் மருந்து அல்லது கருவி உலகில் கண்டுபிடிக்கப்-படவில்லை.கவலை என்னும் பூதம் தொட்டில் முதல் சுடுகாடு வரை தொடர்கிறது. கவலை என்னும் அழுத்தத்தினால் மனிதன் செய்யாதது எது? கவலைக் கடலிலிருந்து மீளவிரும்பி போதை நெருப்பில் விழுந்துவிடுவது வேதனை, அதனால் அழிந்த நம்பிக்கைகளும் எதிர்ப்-பார்ப்புகளும் எத்தனை?சின்னச் சின்ன கவலைகளுக்கும் தொல்லை-களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழ்க்-கையை வீணடிக்கலாமா? கவலை நோயின் முக்கிய பாதிப்பாகும்.
கவலை, மனச்சோர்வு, அதைரியம், பதற்றம் இவற்றுக்கு எதிர்ச்சொற்கள் நம்பிக்கை, துணிவு, உற்சாகம், அமைதி என்பதுதான். எதிரெதிர் சிந்தனைகள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. நேர்மறை நம்பிக்கைகளை விதைத்து அவநம்பிக்-கைகளை களையெடுக்கலாம்.வேலை கிடைக்காததால் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார் ஒருவர். பெரும் முயற்சி-க்குப் பிறகு ஒரு வேலை கிடைத்தது. ஆனாலும் அவர் கவலையோடு இருந்தார் ஏன்? என்று கேட்டார் நண்பர். அதற்கு அவர் வெகு நாளைக்குப் பிறகு கிடைத்த வேலை ஒரு வேளை போய்விட்டால் என்ன செய்வதென்று கவலையாக இருக்கிறது என்றார். இவர்களுக்கு விடிவே இல்லை.
ஒரு முயற்சியில் வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் இன்னும் மகிழ்ச்சி என்று நினைக்க வேண்டும். ஏனென்-றால் நம்முடைய முயற்சி என்ற செயல் தொடர அதுவே வாய்ப்பாகுமே!
ஆளுமை என்னும் முகமூடி என்று இக்கட்டுரையின் தலைப்பு. எதிர்மறை எண்ணங்கள் எனும் மூடியை கழற்றி எறிந்து-விட்டு, நேர்மறை எண்ணங்களால் ஆன முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்!

நடிகவேள் எம்.ஆர். இராதா - கவிஞர் நந்தலாலா

நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.
எம்.ஆர். இராதா நல்லவேளை திரைப்படங்-களில் நடித்தார். ஒருவேளை அவர் திரைப்-படங்களில் நடிக்காமல் போயிருந்தால் அவர் எப்படி நடிப்பார் என்று நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.
எம். ஆர். இராதா சொல்லும் போது, நான் ஒய்வு பெற்ற பிறகுதான் திரைப்படங்களுக்கு வந்தேன் என்றார்.எம்.ஆர். இராதா திரைப்படங்களை இளைஞர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இராதாவின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டின் கதாநாயகன்தான் உண்மை-யான தமிழ்ச் சமூகத்தின் வில்லன். தமிழ்ச் சமூகத்தின் நல்லவன்தான் உண்மையான தமிழ்ச் சமூகத்தின் கதாநாயகன்.
நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து இருந்தால், கன்னட நாட்டில் பிறந்த நடிகை கண்ணாம்பாள் சுத்தத் தமிழ் பேசுவார். சிவாஜி கணேசன் ஏறக்குறைய கர்ஜனை செய்வார். எஸ்.எஸ். இராஜேந்திரன் தமிழ் ஏறக்குறைய வீணை வாசிப்பது போல சுத்தமாக இருக்கும். பி.எஸ்.வீரப்பா மீட்டர் கணக்கில் சிரிப்பார். தமிழ்த் திரைப்படங்கள் முழுவதும் தூய தமிழ் பேசிய போது, தமிழ்நாட்டின் ஒரே ஒரு தமிழ் நடிகன்தான் மக்கள் தமிழ் பேசினான்; கொச்சைத் தமிழ் பேசினான். இதிலிருந்து வரலாறு என்ன பதிவு செய்திருக்கிறது என்றால், திரைப்படங்களில் தூய தமிழ் பேசியவர்களால் சமூகத்திற்குப் பயன்ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கொச்சைத் தமிழ் பேசிய இராதாதான் தமிழரைச் சுத்தமாக்கினார் என்பது தமிழகத்தின் வரலாறு.
எம்.ஆர். இராதா முன்னிறுத்திய அற்புதமான செய்தி என்னவெனில், அவர் கலையுலகில் ஒரு கலகக்குரல். நீங்கள் நன்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எம்.ஆர். இராதா தமிழ்ச் சமூகத்தின் கலகக்குரல், அல்லது கலகம் செய் என்று சொன்னவர். உண்மையிலேயே ஒரு பெயரைச் சொன்னால் இந்த நாடு அதிர்ந்தது என்று சொன்னால், அது எம்.ஆர். இராதாவின் பெயர்தான்.
எம்.ஆர். இராதாவைப் போல பிம்பங்களை உடைத்தவர் நாடக உலகிலும், திரையுலகிலும் எவருமே இல்லை, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அவர் நடித்த காட்சியை, அவர் பாடலைக் கேட்டுப் பாருங்-கள். ஓர் ஆழ்ந்த கலகம் அவரின் நடவடிக்கை முழுவதும் இருந்தது. அதே போல அவரிடம் இருந்த துணிச்சலும் அற்புதமானவை.இன்றைக்கு இராமர் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒரு கலைஞனாக இருந்த இராதா திருச்சியில்தான் நாடகம் போட்டார் தேவர் மன்றத்தில். மன்றத்திற்கு வெளியே ஒரு சுவரொட்டியும் ஒட்டினார். அதில் உள்ளே வராதே என எழுதியிருந்தார். என் நாடகத்தைப் பார்த்து யாருக்காவது மனம் புண்பட்டால் அவர்கள் என் நாடகத்திற்கு வரவேண்டாம் எனக் கூறியிருந்தார். இது எவ்வளவு பெரிய மேதைமை தெரியுமா!
எம்.ஆர். இராதாவுக்கு இராமன் என்கிற சித்திரத்தின் பிம்பத்தைத் தூளாக்க வேண்டும். எப்படி ஆக்குவது மணிக்கணக்காகப் பேசியா? அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதைப் பேச்சாளர் பேசிவிட்டு போயிடுவார். கலைஞனுக்கு அது தேவையில்லை. நீங்கள் இராதாவைநுட்பமாகக் கவனிக்க வேண்டும். நாடகமேடையில் இராமாயண நாடகத்தின் போது, 2 பக்கமும் இராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார். இந்த நாடகத்தில் வருகிற காட்சிகள் மீது சந்தேகம் வந்தால் இந்தப் புத்தகங்களில் அதற்கு பதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாடகம் போடுகிறார்.
இன்றைக்கு பிம்பங்களை உடைப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சாதாரண சிறிய நடிகர் கூட பெரிய பிம்பத்தை வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஆர். இராதா பிம்பங்களை உடைக்கும் அற்புதமான காரியங்களைச் செய்தார்.ஒரு சமயம் இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் எம்.ஆர். இராதாவிடம் வருகிறார். எம்.ஆர். இராதா 5 திரைப்படங்களில் நடித்து முடித்து-விட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தவர். பொதுவாக நாடகத்தில் நடித்தவரெல்லாம் திரைப்படத்திற்குப் போனதுதான் வரலாறு. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, நாடகத்திற்கு வந்த ஒரே கலைஞர் எம்.ஆர்.இராதாதான். மறந்துவிடக் கூடாது!
இரத்தக் கண்ணீரைத் திரைப்படமாக்க வேண்டும் என பெருமாள் சொன்னபோது, எம்.ஆர். இராதா 3 நிபந்தனைகளை வைக்கிறார். ஒன்று, தினமும் நாடகம் நடத்தி முடித்து, இரவு 12 மணிக்கு மேல்தான் படத்தில் நடிக்க வருவேன். இரண்டு இரத்தக் கண்ணீர் நாடகத்தின் இறுதியில் தன் மனைவியை தன் சகநண்பனுக்குத் திருமணம் முடிப்பதை கண்டிப்பாய் காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதாக எனக்கு ஊதியமாக 1,25,000 வேண்டும் என்றார். நாடகக் கலைஞனாக இருந்து உச்சநிலையில் இருந்தவர் அவர்.
இராமயண நாடகத்தில் இராமனாக வேடம் போட்டு முதல் காட்சியில் வெளிவருகிறார் எம்.ஆர்.இராதா. வந்ததும் என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு தூண் மீது கால்களை வைத்துக் கொண்டு சரக், சரக் என சொறிகிறார். பொதுவாக ரசிகர்கள் இப்படி சொறிகிறவர்-களை கதாநாயகர்களாக ஏற்க மாட்டார்கள். ஏன்னா சொறிந்து கொண்டு நிற்பதெல்லாம் சாதாரண ஒரு மனிதனின் வேலை. அப்படி ஒரு கதாநாயகனே சொறியாமல் இருக்கும் போது ஒரு கடவுள் சொறிவாரா? சொறிய முடியாத கடவுளை எல்லாம் சொறிய வைத்தவர் எம்.ஆர். இராதா. மறந்துவிடக் கூடாது! இந்தப் பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இராதாவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.
அவர் சிறுவயது முதலே கலக்காரராகவே இருந்து வந்துள்ளார். டி.ஆர். மகாலிங்கத்தோடு எம்.ஆர்.இராதா சிறுவயதில் நடிக்கிறார். அப்பவெல்லாம் நாடகக் கொட்டகைகளில் பார்ப்பன சிறுவர்களுக்கு ஒரு பந்தி, மற்றவர்-களுக்கு ஒரு பந்தியும் இருந்தது. ஏன் நம்ம கூட இவங்க சாப்பிட மறுக்கிறார்கள்? என இராதா யோசனை செய்கிறார். ஒருமுறை டி.ஆர். மகாலிங்கத்திற்குக் கொடுத்த காபியை எடுத்து பாதி குடித்துவிட்டு, பாதி வைத்து விடுகிறார். அந்தக் காபியை டி.ஆர். மகாலிங்கம் குடித்து-விட்டு உயிரோடு இருப்பதை இராதா பார்க்கிறார். நாம் சாப்பிட்டதை இவர் சாப்பிட்டார் ஒன்றும் ஆகவில்லையே, பிறகு ஏன் ஒன்றாகச் சாப்பிட மறுக்கிறார்? என அவரே பின்னாளில் எழுதினார்.
அன்றைய நாள்களில் நாடகங்கள் தொடங்கு-வதற்கு முன்னால் ஜெனரேட்டருக்கு தீபாரா-தனை காட்டி, சூடம் கொளுத்துவார்கள். அப்படித்தான் நாடகக் கொட்டகை உரிமையாளர் ஒருவர் தீபமெல்லாம் காட்டி-னார். ஆனால் ஜெனரேட்டர் ஒடவில்லை. எம்.ஆர். இராதா ஒரு கார் மெக்கானிக் மற்றும் நல்ல எலக்ட்ரீசியன். நாடகக் கொட்டகை உரிமையாளர் இராதாவிடம் வந்து, ஜெனரேட்ட-ரைச் சரி செய்து தரும்படி கேட்கிறார். -உடனே எம்.ஆர். இராதாவும், சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறார். சரி செய்து விட்டு கொட்டகை உரிமையாளரிடம் சென்று உங்க செருப்பைக் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கிறார். எதுக்கு? என அவர் கேட்கிறார். இல்லை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி இராதா, ஜெனரேட்டரை செருப்பா-லேயே அடிக்கிறார். அடித்துவிட்டு உரிமை-யாளரிடம், இப்போ ஜெனரேட்டரைப் போடுங்கள் என்கிறார். ஜெனரேட்டர் ஓடத் தொடங்கியது. எம்.ஆர். இராதா சொன்னாராம் ஜெனரேட்டர் தீபம் காண்பித்தாலும் ஓடும், செருப்பால் அடித்தாலும் ஓடும் என்றாராம்.
அதேபோல போர்வாள் எனும் நாடகத்தை எழுதிய சி.பி. சிற்றரசை சிலர் பொதுமேடையில் கிண்டல் செய்தனர். எந்த ஊருக்கு சிற்றரசு எனக் கேட்டனர். உடனே இராதாதான் இவர் நாடகத்தில் பதில் சொன்னார். இராஜ-கோபாலாச்சாரியார் என்பவரைச் சக்கரவர்த்தி என்றும் அழைப்பார்கள். அவர் எந்த ஊருக்கு சக்கரவர்த்தியோ, அதற்குப் பக்கத்து ஊருக்குத் தான் எங்காளு சிற்றரசு எனப் பதில் சொன்னார்.
எம்.ஆர். இராதா குறித்து சிவாஜி ஒருமுறை கூறினார். திரையுலகில் என் முகத்திற்கு அருகே வேறொரு நடிகரின் முகம் வருகிறது என்றால் அதைக் கண்டு அஞ்ச-மாட்டேன். அண்ணன் இராதாவின் முகம் வந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொன்னார்.
பத்திரிகைக்காரர் ஒருவர் இராதாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு அற்புதமாக நடிக்கின்றீர்கள், துணிச்சலாக இருக்கின்றீர்கள், இந்நிலையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்-டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கிறார்.இராதா சொல்கிறார், இப்படிக் கேள்வி கேட்பவரையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்கிறார். என் பிழைப்பு நடிப்பு. உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? என்றும் கேட்டார். இன்றைக்கு நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து-விட்டார்கள்.
ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் எம்.ஆர்.இராதாவைப் பிரச்சார பணிக்கு அழைக்கிறார். இராதாவும் ஒப்புக் கொள்கிறார். உடனே இராதாவின் பிரச்சாரச் செலவு-களுக்காக காமராசர் ரூ.10,000 பணத்தை அவரின் வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார். ஆனால் இராதா பணத்தை வாங்க மறுத்து-விட்டார். அப்போது இராதா சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் பேசுவதாக இருந்தால், இதைவிட அதிக பணம் வைத்-துள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு பேசியிருப்பேன் எனச் சொல்கிறார்.பிறகு சொன்னார் பெரியார் ஆதரிக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நானும் ஆதரிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. இதைப் பெருந்தலைவரிடம் சொல்லிவிடுங்கள் எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து-விடுகிறார். இதைக் காமராசரிடம் சொன்ன போது தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் இருப்பது மிகுந்த பெருமைக்-குரியது. ஏனெனில் இராதா போன்ற தொண்டர்கள் வேறு யாருக்குக் கிடைத்-திருக்கிறார்கள் என காமராசர் சொன்னார்.
உதகையில் ஒருமுறை திரையரங்கப் படப்பிடிப்பு நடக்கிறது. வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போ ஒரே சத்தமாக இருக்கிறது. உடனே எம்.ஆர். இராதா என்ன சத்தம்? எனக் கேட்கிறார். நடிகர்களைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்துள்ளனர் எனச் சொல்கிறார்கள். உடனே எம்.ஆர்.இராதா அணிந்திருந்த டிராயருடன் வெளியே வருகிறார்.எம்.ஆர்.இராதா கூட்டத்தினரிடம் கேட்-கிறார், எல்லோரும் எங்க வந்தீங்க? ஒருவர் சொன்னார், நடிகர்களைப் பார்க்கத்தான் வந்தோம் என்கிறார். எல்லோரும் என்னை மாதிரிதான் உள்ளே இருக்காங்க. இப்ப நான், அசிங்கமாக இருக்கிறேனே அதே போல்தான் எல்லோரும் இருக்காங்க. ஏய்! தெரிஞ்சுக்க மேக்கப் போட்டாதான் நல்லா இருப்பாங்க, இல்லைன்னா உங்களைவிட அசிங்கமா இருப்பாங்க எனச் சொல்லி மக்கள் கூட்டத்-தைக் கலைத்துவிட்டார். ஆக, நடிகன் என்கிற பிம்பத்தை உடைத்தார். அதே போல தலைவர்கள் என்கிற பிம்பத்தைத் தூளாக்-கினார்.
ஆனால் நல்ல விசயத்தைக் கொண்டாடியதில் இராதா மிகச் சிறந்த கலைஞன். என்.எஸ்.கே இறந்து போகிறார். இராதாவுக்குச் செய்தி வருகிறது. இவரும் போகிறார். அங்கு என்.எஸ்.கே நெற்றியில் விபூதி பூசப்பட்டுள்ளது. அதைக் கண்ட இராதா வருத்தப்படுகிறார். எவ்வளவு பகுத்தறிவு பேசிய கலைஞன்! அவருடைய நெற்றியில் திருநீறா? எனக் கவலைப்பட்ட இராதா நேராக வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி விபூதியைத் துடைத்து-விட்டு, சவ ஊர்வலத்தை முன்னின்று நடத்தி-னார். அதே போல இசை மேதை இராஜரத்-தினம் இறந்த போது தன்னுடைய காரில் ஏற்றி இடுகாடு வரை சென்று சவஅடக்கம் செய்தது மட்டுமல்ல, இராஜரத்தினம் எந்த இசைக் கருவியின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்-பெற்றாரோ, அந்த நாதஸ்வரத்தை 43 அடியில் செய்து அவரின் சமாதியில் வைத்தவர் எம்.ஆர்.இராதா என்பதை யாரும் மறந்து-விடக்கூடாது.
ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார். நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார்.உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார்.உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன் கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று கூறுகிறார்.
இப்படி நடிகர்களை விமர்சித்த பெரியார் தம் வாழ்வில் ஒருவருக்கு மன்றம் அமைத்தார் என்றால் அது எம்.ஆர்.இராதாவுக்குத்தான். பெரியாரே முன்னின்று இராதா மன்றம் என்ற ஒன்றை அமைத்தார். வி.பி.சிந்தன் எதிரிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த போது, எம்.ஆர். இராதாவும் மருத்துவ-மனையில் இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு என்னுடனே இருக்கின்றீர்களே என வி.பி. சிந்தன் கேட்ட போது இராதா சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள். உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அருகிலேயே இருந்தார். வாழ்வில் தாம் நேசித்த எல்லா பகுதிகளையும் அப்பழுக்கற்ற முறையில் நேசித்தவர் இராதா.
1907 இல் ஓர் ஏப்ரல் மாதம் சென்னையில் எம்டன் குண்டு வெடித்த-போதுதான் இராதா பிறந்தார். பெரியார் எறிந்த ஒரு அற்புதமான எம்டன் குண்டு எம்.ஆர். இராதா சமூகத்தின் மூடத்தனங்களை, அழுக்குகளை, ஜாதியத்தை, மேலாதிக்கங்களை எதிர்க்க பெரியாரிடம் இருந்த அற்புதமான ஆயுதம் அவர். தம் வாழ்வின் முழுதும் சமரசம் செய்து கொள்ளாத, மனதில் பட்டதை வெளிப்-படையாகச் சொன்ன இராதாவைப் போன்ற கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு நிறையத் தேவைப்-படுகிறார்கள்.

நன்றி - கவிஞர் நந்தலாலா