Friday, August 22, 2008

கவிதை 1 (அம்பேத்கர் )

இருட்டைத் துடைக்கும் எழுஞாயிறு

அம்பேத்கர்!
நம்பிக்கையே
மூலதனமாக
திறமையே
வாழ்வான
கல்விக் கடல்,

கால்சட்டை பருவத்திலேயே
தீண்டாமை தீண்டிய
தழும்புகளோடு
வீரம் சமைத்த வீரம்,

அவரின் எழுதுகோல்
எழுதியவை
சட்டங்களை மட்டுமல்ல
உழைக்கும் மக்களின்
ாழ்க்கை திட்டங்களையும் தான்,

ஆதிக்க வெப்பத்தின்
இறுக்கிய சங்கிகளோடு
இழிவுகளைத்
துடைத்தெழுந்த
விடியல்,

பெரியாரோடு கைகோர்த்த
இவரின் கனவுகள்
மெல்ல... மெல்ல...
நனவாய் விரிகின்றன.
நம் நிலமெங்கும்.

வறுமை, வேதனை
அவமானம், படுதோல்வி
அடிமை, கொடுமை
இத்தனையையும்
எட்டி உதைத்தது
மேதையின் கல்வி

இன்றல்ல
என்றும் வாழ்வார்
வாழ்க்கைப் பக்கங்களில்
உனக்கும் எனக்குமான
இருட்டைத் துடைக்கும்
எழுஞாயிறு...

No comments: