Tuesday, August 26, 2008

அறிந்து கொள்ளுங்கள்


அறிந்து கொள்ளுங்கள்
குழந்தைகளின் உரிமைகள்

1989 நவம்பர் மாதம் குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை அய்.நா. சபை அறிவித்தது.
54 சரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும்.1992 டிசம்பர் மாதம் நம் நாடும், அய்.நா. உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்கப் பொறுப்பேற்றது.குழந்தைகள் என்பவர் யார் என்பதற்கு அய்.நா. கொடுத்துள்ள விளக்கம்.
குழந்தைகள் என்பவர்கள், ஜாதி, மதம், பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள்தான்.குழந்தைகளின் உரிமைகளை நான்கு விதமாக பிரித்துள்ளார்கள்.
1. வாழும் உரிமைகள்
2. பாதுகாப்பு உரிமைகள்
3. வளர்ச்சி உரிமைகள்
4. பங்கேற்பு உரிமைகள்
1. வாழும் உரிமைகள்:இதில், உயிர் வாழ, பெயர் உரிமை பெற, சுகாதாரம், மருத்துவ வசதிகள் பெற, சத்தான உணவு பெற, பெற்றோருடன் சேர்ந்து வாழ, குடியுரிமை பெற போன்ற உரிமைகள் இடம் பெறுகின்றன.
2. பாதுகாப்பு உரிமைகள்:இதில், தீங்கிழைத்தல், புறக்கணித்தல், கடத்தல், பாலியல் துன்புறுத்தல், சுரண்டல், பாரபட்சம் ஆகியவைகளிலிருந்து விடுபடும் உரிமைகளே குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகள் ஆகும்.
3. வளர்ச்சி உரிமைகள்:இதில், கல்வி கற்க, விளையாடுவதற்கு, தனி வளர்ச்சி, திறன் வளர்த்துக்கொள்ள, தகவல் பெற, குடும்ப வாழ்க்கை பெற, ஓய்வு எடுக்க குழந்தைகளுக்கு உரிமைகள் உண்டு.
4. பங்கேற்பு உரிமைகள்:குழந்தைகளை கலந்தாலோசிக்க, சமூக நிகழ்வுகளில் பங்குபெற, கருத்து கூற வாய்ப்பு, குழுவாகச் சயல்பட, சங்கம் அமைக்க போன்ற உரிமைகள் உண்டு.
இதன்படி அய்.நா. உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட நாடுகள் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குழந்தை உரிமைகளை நடைமுறைபடுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அய்.நா. குழு உறுப்பு நாடுகளின் குழந்தைகள் நலன், செயல்பாட்டை கண்காணித்து அய்.நா. பொது சபைக்கு தகவல் அளிக்கும்.
இந்த தகவல்களை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொண்டு, தங்களது பிஞ்சுகளுக்கு இத்தகைய உரிமைகளை அளித்திருக்கிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நன்றி - பெரியார் பிஞ்சு

No comments: