Saturday, August 23, 2008

கவிதை 2 ( பாவேந்தர் )


கந்தக கல்வெட்டுக்கள்

இறப்பும்.. பிறப்பும்...
ஒரே மாதத்தில்
ஏந்திக் கொண்ட
எங்களின் வேந்தர்
பாவேந்தர்.

மரபும்... புதுமையும்..
இவரது எழுத்தில்
உயிர்பெற்று உலாவிய
உதாரணங்கள்
ஏராளம்...

தமிழனுக்கும்...
தமிழுக்கும்...
தமிழ்
மண்ணுக்கும்...
பாவேந்தர்
சொல்லிய வரிகள்
வெந்தணல்.... செந்தணல்
வெடித்த பெருந்தணல்.

மண் விடுதலை
பெண் விடுதலை
பாவேந்தரின்
உயிர் மூச்சென
செயல் பேச்சென
ஏடு சொல்லும்
எழுத்து சொல்லும்.

அன்று மட்டுமல்ல
இன்றும்
சிலிர்க்கின்றன
பாவலரின் பாடல்கள்
தமிழ்ப்பாடங்களின்
பக்கமெல்லாம்...

விடியலைச் சொல்லும்
கந்தக
கல்வெட்டுக்கள்

No comments: